ஆப்நகரம்

வாழ்த்து சொல்லாத பாஜக: வாய் திறக்காத அண்ணாமலை - மீண்டும் ட்விஸ்டா?

எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை வாழ்த்து சொல்லாதது தொடர்பாக சமயம் தமிழிடம் கரு.நாகராஜன் (karu.Nagarajan) பேசியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 24 Feb 2023, 1:34 pm
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும், ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.
Samayam Tamil annamalai eps


தீர்ப்பு வெளியான பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எதிர்கட்சியிலிருந்து கூட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிடமிருந்து அதிகாரபூர்வமாக ஒரு வாழ்த்து செய்தி கூட வெளியாகவில்லை.
எடப்பாடிக்கு ஆறுதல் பரிசு தானா? பாஜக பிளான் என்ன? பன்னீருக்கு புதிய அசைண்ட்மெண்ட்!
ஓபிஎஸ்ஸை இணைத்து செயல்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கும் என்று கூறியுள்ளது. இந்த சூழலில் பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்லததால் அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்கள் சுற்றி வருகின்றன.

ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என தீர்ப்பு வெளியானது பாஜகவுக்கு உடன்பாடில்லையா அதற்காக பாஜக இதில் மௌனமாக இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜனை சமயம் தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். “பொதுக்குழு வழக்கு என்பது அவர்களது உட்கட்சிப் பிரச்சினை. அதில் நாம் தலையிடுவது சரியாக இருக்காது. எங்கள் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லை. டெல்லி சென்றுள்ளார். இன்றோ, நாளையோ தான் வருவார். நாங்கள் எடப்பாடி பழனிசாமியோடு நல்ல உறவில் தான் இருக்கிறோம். அவர்களது வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு சேகரித்தார்.
சசிகலாவுக்கு திடீரென திறந்த கதவு: இது நல்ல வாய்ப்பு - நம்பிக்கைக்கு என்ன காரணம்?
அவர் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறிவிட முடியாது. ஒருவேளை தொலைபேசியில் கூட தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். நமக்கு தெரியாமல் அவர் பேசவில்லை என்று சொல்ல முடியாது” என்றார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி