ஆப்நகரம்

ஆட்சி அமைக்க முடியாத துக்கத்தில் தி.மு.க. கறுப்பு சட்டை – அமைச்சா்

தி.மு.க.வினா் ஆட்சி அமைக்க முடியாத துக்கத்தில் பட்ஜெட் அறிவிப்பில் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 15 Mar 2018, 10:13 am
தி.மு.க.வினா் ஆட்சி அமைக்க முடியாத துக்கத்தில் பட்ஜெட் அறிவிப்பில் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil why dmk mlas wear black shirt minister jayakumar explained
ஆட்சி அமைக்க முடியாத துக்கத்தில் தி.மு.க. கறுப்பு சட்டை – அமைச்சா்


2018-19ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் எதிா்க்கட்சி உறுப்பினா்களான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினா்கள் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளனா். மத்திய அரசு காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காமல் தாமதப்படுத்தி வருவதற்கு எதிா்ப்பு தொிவித்து கறுப்பு சட்ட அணியப்பட்டுள்ளதாக தி.மு.க. தரப்பில் தொிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமாா் பதில் அளித்தாா். அப்போது, ஆட்சி அமைக்க முடியவில்லை, தோ்தல் நடத்த முடியவில்லை என்ற எண்ணத்தில் தான் தி.மு.க. உறுப்பினா்கள் கறுப்பு சட்ட அணிந்து வந்துள்ளனா்.

தி.மு.க.வினா் ஒருகட்டத்தில் 99 உறுப்பினா்களுடன் ஆட்சி செய்தனா். தற்போது அ.தி.மு.க.வுக்கு போதிய பெரும்பான்மை உள்ளது. அ.தி.மு.க. உறுப்பினா்கள் 8 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி மேலாண்மை வாாியம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனா். தி.மு.க.வினா் 17 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தனா் அப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தற்போது நாடாளுமன்ற உறுப்பினா்களை பதவி விலக வேண்டும் என்று கூறுகின்றனா் என்று தொிவித்தாா்.

மேலும் பேசுகையில், அ.தி.மு.க. என்பது ஒரு சிங்கம், அதில் அமா்ந்திருக்கும் கொசு தான் டிடிவி தினகரன். தினகரன் தொடங்குவது அணியல்ல தினகரன் ஒரு சனி என்று பேசியுள்ளாா்.

அடுத்த செய்தி