ஆப்நகரம்

நூலகமாகும் அரசுப் பள்ளிகள்? திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

தமிழக சட்டமன்றத்தில் அரசுப் பள்ளிகள் நூலகமாக்கும் விவகாரம் தொடர்பாக, திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

Samayam Tamil 18 Jul 2019, 12:13 pm
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Sengottaiyan


மாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை. அதற்கு பதிலாக அந்த பள்ளிகள் நூலகங்களாக இயக்கப்படும். ஒரு ஆசிரியருக்கு மாத சம்பளம் ரூ.50,000 அளவிற்கு கொடுக்க வேண்டியுள்ளது.

ஒருவருமே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து என்ன செய்வது? என்று தெரிவித்திருந்தார். இந்த விஷயம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு இன்றைய சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது கேள்வி எழுப்பினார்.

Also Read: இப்படியொரு அசிங்கம் தேவையா? அமைச்சர் ஜெயக்குமாரை வறுத்தெடுத்த முரசொலி!

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஒரு மாணவர் கூட இல்லாத அரசுப் பள்ளிகள் நூலகமாக மாற்றப்படும். 45 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை.

Also Read: கொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால் உடல்நலக்குறைவால் மரணம்!

மாணவர் இல்லாத பள்ளிக்கு ஆசிரியர் சென்று என்ன பயன் ஏற்படப் போகிறது? பள்ளிகளை மூடுவது அரசின் நோக்கமல்ல. மாணவர் இல்லாத பள்ளிகளை நூலகமாக்க பரிசீலனை செய்கிறோம் என்று கூறினார்.

Also Read: 7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய நளினியின் மனு தள்ளுபடி!

அடுத்த செய்தி