ஆப்நகரம்

நெல்லை, குமரியில் இணையத்தை முடக்கியது ஏன்? உயர்நீதிமன்றக் கிளை கேள்வி!

இணையச் சேவையை முடக்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 25 May 2018, 1:59 pm
சென்னை: இணையச் சேவையை முடக்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
Samayam Tamil Madurai High Court
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையச்சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இயல்பு நிலை திரும்பும் வரை, இணைய முடக்கம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தூத்துக்குடியில் மட்டுமே அசாதாரணமான சூழல் நிலவுகிறது. அங்கு இணையச் சேவை முடக்கப்பட்டது ஏற்புடையது.

ஆனால் நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இணையச் சேவையை முடக்கியது ஏன் என்று உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியது. இதுகுறித்து இன்று மாலை 3 மணிக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அருகிலுள்ள மாவட்டங்களில் முடக்கப்பட்ட இணையச்சேவையால் மாணவர்கள், அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக போராட்டத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்ய, இணையவழிச் சேவை பெரிதும் பயனளிக்கும் வகையில் உள்ளது.

ஆனால் இவ்வாறு முடக்கப்பட்டதால், மருத்துவச் சிகிச்சையும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Why Internet services are banned in Nellai, Kanniyakumari.

அடுத்த செய்தி