ஆப்நகரம்

125 ஆண்டுகளாக உள்ள காவிரி பிரச்சனை இன்னும் நீடிக்கணுமா? கர்நாடகா முதல்வர் குமாரசாமி கேள்வி!

கடந்த 125 ஆண்டுகளாக இருந்து வந்த காவிரி பிரச்சனை இன்னும் நீடிக்க வேண்டுமா என்று கர்நாடகா முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 15 Dec 2018, 10:00 am
கடந்த 125 ஆண்டுகளாக இருந்து வந்த காவிரி பிரச்சனை இன்னும் நீடிக்க வேண்டுமா என்று கர்நாடகா முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil kumarasamy


கர்நாடகா மாநில, தும்கூர் ஸ்ரீ சித்தகங்கா மடத்தைச் சேர்ந்தவர் சாமியார் சிவக்குமார் (111). கடந்த சில தினங்களாக கல்லீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமி நேற்று சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், சுவாமி அவர்களை சந்தித்து நலம் விசாரித்தேன் அவர் நலமுடன் உள்ளார். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்.

காவிரி நீர் பிரச்சனை 125 ஆண்டுகாலமாக உள்ளது எனவே தமிழக அரசுமேகதாது அணைகட்ட ஒத்துழைக்கவேண்டும். கடந்த மழை காலங்களில் காவிரியில் தமிழகத்திற்கு 394 டி.எம் தண்ணீர் வந்தது. அதில் சரிபாதி கடலில் வீணாக கலந்தது. அதனால் தான தமிழக அரசும் தமிழக விவசாயிகளும் கர்நாடகாவில் அணைகட்ட ஒத்துழைக்க வேண்டும் என கேட்கிறோம்.

அணை கட்டினால் மின்சாரம் எடுக்கவும் அதை தொடர்ந்து 4 முதல் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனப்படும். அதை தாண்டி தமிழக விவசாயிகளுக்கும் தான் அந்த தேக்கி வைக்கும் தண்ணீர் பயன்பெரும். அதனால் 125 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த பிரச்சனையை ஏன் இன்னும் நீடிக்கவேண்டும்? தமிழக அரசு சுமுகமாக பேசி முடிவெடுத்து நல்ல நண்பர்களாக இருக்கலாம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி