ஆப்நகரம்

கருணாநிதி ஏன் ஸ்டாலினை திமுக தலைவராக்கவில்லை: ஹெச்.ராஜா விளக்கம்

திமுக பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்த மண்ணில் இருக்க அருகதையற்றவர்கள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்

Samayam Tamil 24 Dec 2019, 6:01 pm
சென்னை: கருணாநிதிக்கு அரசியல் ஞானம் அதிகம். அதனால் தான் அவர் இறக்கும் வரை ஸ்டாலினை திமுகவுக்கு தலைவராக்கவில்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்


திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுகவின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக திமுக கூட்டணிக் கட்சிகளின் பிரமாண்ட பேரணி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கட்சிகளின் பொய்யான பிரசாரத்தால், அறியாமையால் மாணவர்கள் போராடுகின்றனர். திமுக பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்த மண்ணில் இருக்க அருகதையற்றவர்கள் என்றார்.

பெரியார்: பயந்துபோன பாஜக, வறுத்தெடுக்கும் ஸ்டாலின்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி குடியுரிமை பெற தகுதியான இந்துக்கள் உள்பட அந்த 6 மத்ததை சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் முதல் எதிரி ஸ்டாலின் தான் என சாடிய ஹெச்.ராஜா, கருணாநிதிக்கு அரசியல் ஞானம் அதிகம். அதனால்தான் அவர் இறக்கும் வரை ஸ்டாலினை திமுக தலைவராக்கவில்லை என்றும் விமர்சித்தார்.

MK Stalin: சென்னையில் ஸ்டாலின் உட்பட 8,000 பேரை குறிவைத்த போலீஸ்; ஏன் என்ன ஆச்சு!

இந்தியாவுக்கு ஆவணங்கள் இல்லாமல் வருபவர்கள் இங்கு இருக்க வேண்டும் எனப் பேசுவதே தேசத்துரோகம். ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உண்மையை எடுத்துச் சொல்ல பாஜக முடிவெடுத்துள்ளது. சோனியா காந்தியின் குடியுரிமையை ரத்து செய்ய மாட்டோம். அதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி