ஆப்நகரம்

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்?- மத்திய அரசுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி!

டெல்லியில் முகாமிட்டு, போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை இதுவரையும் மத்திய அரசு புறக்கணிப்பு செய்வது ஏன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 24 Mar 2017, 10:17 pm
டெல்லியில் முகாமிட்டு, போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை இதுவரையும் மத்திய அரசு புறக்கணிப்பு செய்வது ஏன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil why pm modi still being silent on tamilnadu farmers protest in delhi actor prakash raj asks
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்?- மத்திய அரசுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி!


தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 11 நாட்களுக்கும் மேலாக, தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். வறட்சி நிவாரண நிதி கோரியும், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக, பிச்சையேந்தும் போராட்டம், தற்கொலை செய்யும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், கோவணம் கட்டிப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களை ஆதரித்து, இன்று நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலகத்தினர் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, விவசாயிகள் நிலையை பார்த்து, அவர்கள் கண்கலங்கினர்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்,’’மழை இல்லாததால், விவசாயம் நலிவடைந்து வருகிறது. கடந்த 11 நாட்களாகப் போராடும் விவசாயிகளை மத்திய அரசு ஏன் புறக்கணிக்கிறது. அவர்களின் அழுகுரல் இந்த அரசுக்குக் கேட்கவில்லையா? விவசாயிகளை கண்டும் காணாமல், புறக்கணிப்பது ஏன்? இவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,’’ எனக் குறிப்பிட்டார்.

இதேபோன்று, நடிகர் விஷால் பேசுகையில், விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண உடனடியாக, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Why PM Modi still being silent on Tamilnadu farmers protest in Delhi: Actor Prakash Raj asks.

அடுத்த செய்தி