ஆப்நகரம்

தமிழக கல்லூரிகள் திறப்பு, செமஸ்டர் தேதி: வெளியான முக்கியத் தகவல்!

அடுத்த ஆண்டு கல்லூரி செமஸ்டர்கள் நடத்துவது தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 11 Nov 2020, 12:22 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது. இந்த சூழலில் வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்று முடிவுக்கு வராத நிலையில், அதற்குள் என்ன அவசரம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சூழலில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil TN Semester Exams


அதுவும் நாளை (நவம்பர் 12) இதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முறையான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக கால தாமதமாக தொடங்கப்பட்டதால் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகுப்புகள் நடத்தவும், மாதிரி தேர்வுகள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான ஆண்டாகும். ஏனெனில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. தேர்தல் நடத்துவதற்கு பள்ளி, கல்லூரிகள் அதிகளவில் தேவைப்படும்.

தமிழக கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

அதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம். எனவே சட்டமன்ற தேர்தலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பள்ளி, கல்லூரி தேர்வுகளை முன்கூட்டியே நடத்த வேண்டும். அதற்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்த வேண்டியது அவசியம்.

அந்த வகையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்தி முடிக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி கல்வியாண்டு கால அட்டவணையில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி