ஆப்நகரம்

ஓசி மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்ட போலீஸார்: பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை போலீஸார் உறவினர்களுடன் பேச அனுமதித்தது ஏன் என்பது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 23 Oct 2021, 10:46 am
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை சமீபத்தில் கோவை நீதிமன்றத்திலிருந்து சேலம் சிறைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். போகும் வழியில் பாதியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரோடு பேச போலீஸார் அனுமதித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.
Samayam Tamil mutton biryani


கையில் குழந்தையுடன் சில பெண்கள், மற்றும் சிலர் அவர்களோடு வண்டியை நிறுத்தி பேசும் காட்சிகள் வெளியாகின. சட்டத்துக்கு புறம்பாக இது போல் சலுகை காட்டிய சம்பவத்தால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து விதிமுறைகளை மீறி குற்றவாளிகளின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த ஒழுங்கீன செயலுக்காக ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி, ஆகியோரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா ஐபிஎஸ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஸ்வீட் பாக்ஸ் ஊழல்? டெண்டர் விதிகளை மாற்றி விளையாடிய அமைச்சர் மகன்!
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தியது தெரியவந்துள்ளது.

கோவை நீதிமன்றத்தில் வைத்து குற்றவாளிகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் போலீசாரிடம் கேட்டுள்ளனராம். நீண்ட நாட்களாக மட்டன் பிரியாணி சாப்பிடவில்லை. நீங்களும் பசியாக இருப்பீர்கள், அனைவருக்கும் மட்டன் பிரியாணி கொண்டு வந்துள்ளோம் என போலீசாரிடம் உறவினர்கள் கூறியதாக சொல்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக் கூடாது என போலீசார் கூறியுள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு: அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
அதனால் பீளமேடு வரை போலீஸ் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அங்கு போலீசாரின் வாகனத்தை நிறுத்தி மட்டன் பிரியாணி கொடுத்துள்ளனர். பின்னர் கைதிகளுடன் உறவினர்கள் பேசியுள்ளனர். பிரியாணி பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கைதிகளும் போலீஸாரும் வேனில் வைத்து சாப்பிட்டுக்கொண்டே சேலம் திரும்பியது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி