ஆப்நகரம்

டிடிவி தினகரன் மகள் திருமணம் தள்ளிப்போனது ஏன்?

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமணம் தள்ளிப்போயுள்ள நிலையில் எப்போது நடைபெறும், அரசியல் ரீதியாக ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 16 Jun 2021, 5:00 pm
திருமண விழா மேடைகள் அரசியல் மேடைகளாக மாறிய பல நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. எதிரும் புதிருமாக தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரும் எம்.ஜி.ஆரும் கோலோச்சிக் கொண்டிருந்த சூழலில் தமிழிசை, சௌந்தர்ராஜன் ஆகியோரது திருமணத்தில் இருவரும் மேடையேறி மணமக்களை வாழ்த்தி பேசினர். அரசியலில் இரு துருவங்களாக கருதப்பட்ட அந்த இரு தலைவர்களும் ஒரே மேடையில் பேசிய நிகழ்வு முக்கியமானது.
Samayam Tamil ttv dhinakaran


கலைஞர் கருணாநிதியின் பல முக்கியமான அரசியல் பேச்சுகள் திருமண விழாக்களில் நடந்துள்ளன. அந்தவகையில் தமிழ்நாட்டில் தற்போது ஒரு திருமணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ்ஸுக்கு பதவி: அதிமுகவில் எடப்பாடி நினைச்சது தான் நடக்குமா?
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இவர்களது திருமணம் சசிகலா தலைமையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஜூன், 13ஆம் தேதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகள் திருமணத்துக்கு உறவினர்கள் மட்டுமின்றி, விஐபிக்கள் ஏராளமானோரை தினகரன் அழைத்திருந்தார்.

திருமணத்துக்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தங்களுக்கு இன்னும் அதிமுகவில் செல்வாக்கு இருக்கிறது எனக் காட்டுவதற்காக தினகரகன் தரப்பு திட்டமிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 10 பேர் மட்டுமே திருமணத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சசிகலா உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்க முடியாது என்பதால், ஜூன் 13ஆம் தேதி நடைபெற இருந்த திருமணத்தை, தினகரன் ஒத்தி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி: சபரீசனுக்கு நோ, விஜயனுக்கு யெஸ்!
ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் ஏதாவது ஒரு தேதியில் நடத்தி கொள்ள கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு தினகரன் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தந்தை என டெல்டா மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பூண்டி துளசி அய்யா வாண்டையாரின் பேரன் தான் மணமகன். வாண்டையார் சமீபத்தில் மறைந்த நிலையில் திருமணம் தள்ளிப்போனதற்கு அதுவும் ஒரு காரணமாம்.

திருமணம் எப்போது நடைபெற்றாலும் அரசியல் சரவெடி இருக்கும் என்கிறன்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அடுத்த செய்தி