ஆப்நகரம்

துர்கா ஸ்டாலின் குட் புக்கில் இடம் பிடித்தவருக்கு ஆப்பு: ஸ்டாலின் காட்டிய அதிரடி!

ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட சுரேஷ் ராஜன் மா.செ பதவி பறிக்கப்பட்ட பின்னணி குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 5 Mar 2022, 3:13 pm
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சி உத்தரவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டவர்கள் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கோபத்தில் உள்ளார்.
Samayam Tamil mk stalin family


கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு ஆங்காங்கே சில திமுகவினர் பதவிகளை கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினிமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், கழக பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நிலைமை இப்படி இருக்க நாகர்கோவிலில் மாவட்டச் செயலாளரே கட்சிக் கட்டுப்பாட்டை மீறி உள்ளடி வேலை பார்த்தது தெரிய வந்ததால் இரவோடு இரவாக சீட்டை கிழித்துள்ளார் ஸ்டாலின்.

ஸ்டாலினுக்கு இரவில் வந்த போன் கால்: ஒரே நாளில் இத்தனை சம்பவங்களா?

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்தவர் என்.சுரேஷ் ராஜன். இவர் மு.க.ஸ்டாலினுக்கு குடும்ப ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கன்னியாகுமரி சென்றபோது கூட சுரேஷ் ராஜனின் வீட்டில்தான் தங்கியுள்ளார். அந்த அளவுக்கு சுரேஷ்ராஜனின் மனைவியும் ஸ்டாலின் மனைவி துர்காவோடு மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.

முதல்வர் வீடு வரை தனக்கு செல்வாக்கு இருக்கிறது எனக் கூறிக்கொண்டு குமரி மாவட்ட திமுகவையே தன் பக்கம் வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் சுரேஷ் ராஜன்.

இது குறித்து குமரி மாவட்ட திமுக புள்ளிகளிடம் விசாரித்தோம். “நாகர்கோவில் மாநகராட்சித் தேர்தலில் தனது ஆதரவாளரான ஒரு பெண்ணை மேயராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சுரேஷ் ராஜன். ஆனால் குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் ஆதரவாளராக அறியப்படும் மகேஷ் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சிக்குள்ளும், நாகர்கோவில் பகுதிகளிலும் பேச்சு அடிபட்டது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000: ஆனால்.. ட்விஸ்ட் வைக்கும் பிடிஆர்!
முதல்வரும் மகேஷ் பெயரை டிக் அடிக்க, சுரேஷ்ராஜன் அவரது வெற்றியைத் தடுக்க பாஜகவோடு ரகசியமாக கைகோர்த்துள்ளது தெரியவந்தது. மகேஷை தோற்கடிக்கும் வகையில் திமுக கவுன்சிலர்கள் 4 பேர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். துணை மேயர் தேர்தலில் கட்சி தலைமை அறிவித்தவருக்கு எதிராக ராமகிருஷ்ணன் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. இந்த பின்னணியில் சுரேஷ் ராஜன் இருப்பதாக தலைமைக்கு தகவல் பாஸ் செய்யப்பட்ட பின்னரே ஸ்டாலின் அதிரடியாக அவரது பதவியை பறித்து மகேஷிடம் வழங்கியுள்ளார்” என்கிறார்கள்.

அடுத்த செய்தி