ஆப்நகரம்

ஏன் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது? பாலச்சந்திரன் கொடுத்த விளக்கம்!

தமிழ்நாட்டில் சில பகுதிகளில் ஏன் ரெட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார் பாலச்சந்திரன்.

Samayam Tamil 26 Nov 2021, 3:40 pm
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக இருப்பதாகவும், அடுத்த சில நாட்களுக்கு தீவிரம் தொடரும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn rains


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாகவும், அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என தெரிவித்த அவர் கடலோரோ மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதி கனமழைக்கான அலர்ட்டாக இல்லாமல் தொடரும் மழை பாதிப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைக்காக ரெட் அலர்ட் வழங்கப்பட்டிருக்கிறதாக கூறினார்.
எல்.முருகனை இப்படி பேசுவது ஏன்? எல்லை மீறுகிறாரா அண்ணாமலை?
கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதி கனமழையும், 70 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளதாக கூறிய அவர், அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய கூடும் என்றார்.
ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்: கலக்கத்தில் அமைச்சர்!
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தற்போது வரை 70 சதவீதம் கூடுதலாகவும் சென்னையில் 67 சதவீதம் கூடுதலாகவும் பதிவாகி உள்ளதாக கூறினார்.

வரும் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற கூடும் என்றும் இதன் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி