ஆப்நகரம்

மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் வரும் நாள்களிலும் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Jan 2021, 11:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுது இலங்கை, குமரி கடல் பகுதியில் சுமார் 5.5 கிலோமீட்டர் உயரம் வரை நீடிக்கிறது.
Samayam Tamil tn rain


இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை டெல்டா மாவட்டங்கள் கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா: முதல்வர் உத்தரவு!
திருச்சி, மதுரை, விழுப்புரம், புதுவை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலா விடுதலையில் பெரிய சிக்கல்: டெல்லி பறந்த தினகரன்?

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் ஓட்டி இருக்கும்.

அடுத்த செய்தி