ஆப்நகரம்

முதல்வரை அடிமை நம்பர்.1 என்று குறிப்பிட்ட விக்கிபீடியா!

தமிழக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியை லிஸ்ட் ஆப் தமிழ்நாடு சீஃப் மினிஸ்டர்ஸ் என்ற விக்கிப்பீடியா அடிமை நம்பர் 1 என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 17 Feb 2017, 12:52 am
தமிழக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியை லிஸ்ட் ஆப் தமிழ்நாடு சீஃப் மினிஸ்டர்ஸ் என்ற விக்கிப்பீடியா அடிமை நம்பர் 1 என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil wikipedia trolls tamilnadu chief minister edappadi palanisamy
முதல்வரை அடிமை நம்பர்.1 என்று குறிப்பிட்ட விக்கிபீடியா!

தமிழகத்தில் நிலவி வந்த பரபரப்புக்கு மத்தியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இன்று மாலை முதல்வராக பதவியேற்றார். ஆனால், அவர் பதவியேற்ற சில நிமிடங்களில் விக்கிப்பீடியாவின் தமிழக முதல்வர்கள் பட்டியல் என்ற பக்கத்தில் முதல்வரை அடிமை நம்பர் 1 என்று தகவல் பதிவாகியுள்ளது.

இந்தப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் (பிப்ரவரி 16, 2017) முதல்வராகிறார் என்றும், அவரது பெயரை K.Palanisamy (aka) Adimai No.1 என்றும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இதனை யார் செய்தார்கள் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், விக்கிப்பீடியாவில் உள் நுழைவதற்கு பயனீட்டாளர் முகவரி வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் தகவலை எடிட், பதிவேற்றம் செய்யலாம். அந்த வகையில் தான் யாரோ இதனை பதிவுட்டுள்ளனர்.

அடிமை என்று தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் விக்கிப்பீடியா அதனை சரிசெய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Wikipedia trolls tamilnadu chief minister edappadi palanisamy

அடுத்த செய்தி