ஆப்நகரம்

முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி?

ரஜினிகாந்த் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 12 May 2021, 1:52 pm
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொரொனா பரவல் காரணமாக இரு முறை தடைபட்டது. ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
Samayam Tamil mk stalin rajinikanth


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர் ரஜினிகாந்த் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் அரங்கு அமைக்கப்பட்டு கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

முழு ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகள்: இன்று முதல் அமல்!

சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் ரஜினிகாந்தின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் குடும்ப சென்டிமெண்டுகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியுடன் இதற்கு முன் ஜோடியாக நடித்துள்ள மீனா, குஷ்பூ ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிகட்டப்படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சியமைக்கும் சூழல் நிலவிய நிலையில் ரஜினி வாழ்த்து செய்தி வெளியிட்டார். அத்துடன் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினி சென்னை வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி போட்ட குண்டு: இனி சசிகலா வர வாய்ப்புள்ளதா?

அண்ணாத்த திரைப்படத்தின் இறுதிகட்டப்பணிகள் சென்னையில் தொடர்ந்து நடைபெறும். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி