ஆப்நகரம்

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: விவசாயிகள் திட்டவட்டம்

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தில்லியில் போராடி வரும் விவசாயிகள் திட்டவட்டம் தெரிவித்துள்ளனர்.

TNN 28 Mar 2017, 10:15 pm
புதுதில்லி: கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தில்லியில் போராடி வரும் விவசாயிகள் திட்டவட்டம் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil will continue protest until the demands were met tn farmers
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: விவசாயிகள் திட்டவட்டம்


தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், தில்லியின் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்த தமிழக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விவசாய பிரதிநிதிகளுடன் நேரில் சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து 15-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் திட்டவட்டம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, அவர்களுடன் திமுக எம்பி திருச்சி சிவாவும் உடனிருந்தார்.
Will continue protest until the demands were met: TN Farmers

அடுத்த செய்தி