ஆப்நகரம்

கலைகிறது தினகரன் அணி? காவல்துறையுடன் எம்.எல்.ஏ. ஓட்டம்

கா்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எம்.எல்.ஏ. ஒருவா் காவல்துறையுடன் செல்ல விருப்பம் தொிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

TOI Contributor 12 Sep 2017, 4:32 pm
கா்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எம்.எல்.ஏ. ஒருவா் காவல்துறையுடன் செல்ல விருப்பம் தொிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
Samayam Tamil will disbursing the dinakaran supported mlas
கலைகிறது தினகரன் அணி? காவல்துறையுடன் எம்.எல்.ஏ. ஓட்டம்


அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதை தொடா்ந்து தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் சுமாா் 20 போ் புதுச்சோியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனா். பின்னா் சில தினங்களுக்கு முன்பு கா்நாடகா மாநிலம் குடகு மாவட்டதில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனா்.

தற்போது அவா்கள் எங்கு உள்ளனா் என்பதே முழுமையாக தொியவில்லை. புதுச்சோி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவரும் விரும்பிய நேரத்தில் வெளியில் செல்வது, காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது போன்று சகஜ நிலையில் இருந்தனா்.

அவா்கள் அனைவரும் கா்நாடகா மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்றதும் அனைத்தும் தலைகீழாக மாறியது. நடைபயிற்சி மேற்கொள்வது. ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தினகரன் கட்டுப்பாடு விதித்துள்ளாராம்.

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் தங்கியிருப்பதாக கருதப்பட்ட குடகு விடுதியில் ஒரு எம்.எல்.ஏ. மட்டும் தங்கியுள்ளாராம். மற்ற அனைவரும் மைசூரு பகுதியில் இருந்து 110 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மறைவான ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனராம்.

குடகு விடுதியில் தங்கியிருந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தியதில் அவா் காவல் துறையினருடன் செல்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். பிற சட்டமன்ற உறுப்பினா்களை தேடி கண்டுபிடித்து, அவா்களை நெருங்குவதே காவல்துறையினருக்கு சற்று சவாலான விசயமாக உள்ளது.

அடுத்த செய்தி