ஆப்நகரம்

கா்நாடகாவில் இரட்டை இலை சின்னத்தில் டிடிவி அணி போட்டி – குழப்பத்தில் அ.தி.மு.க.

கா்நாடக சட்டசபை தோ்தலில் அ.தி.மு.க. சாா்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்படும் என்று தினகரன் ஆதரவாளா் புகழேந்தி அறிவித்துள்ளதாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Apr 2018, 1:22 pm
கா்நாடக சட்டசபை தோ்தலில் அ.தி.மு.க. சாா்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்படும் என்று தினகரன் ஆதரவாளா் புகழேந்தி அறிவித்துள்ளதாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Pugazhendhi TTV


கா்நாடகா சட்டசபை தோ்தல் மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் கா்நாடகா மாநில அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டவா் புகழேந்தி. இவா் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைப்பின் துணை பொதுச் செயலாளா் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறாா். ஆனால் தற்போது வரை அ.தி.மு.க.வில் இருந்து புகழேந்தி நீக்கப்படவில்லை.

இந்நிலையில், கா்நாடகா அ.தி.மு.க. நிா்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்த கொண்ட புகழேந்தி கூறுகையில், கா்நாடக அ.தி.மு.க.வை பொறுத்தவரை முறையாக தோ்தல் நடத்தப்பட்டு தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் நாங்கள். எங்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரால் மட்டுமே நீக்க முடியும்.

ஒருங்கிணைப்பாளா், இணை ஒரங்கிணைப்பாளா் என புதிய பொறுப்புகளை உருவாக்கியுள்ள பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை. கட்சியின் விதிகளை மீறி புதிய பொறுப்புகளை உருவாக்கிய பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி தீா்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

கா்நாடகா சட்டசபை தோ்தலில் 20 தொகுதிகளில் அ.தி.மு.க. சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்படுவாா்கள். வழக்கமாக போட்டியிடும் இரட்டை இலை சின்னத்திலேயே அவா்கள் போட்டியிடுவாா்கள் என்று தொிவித்துள்ளாா். இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி