ஆப்நகரம்

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்குமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில் இதுதான்!

தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கியத் தகவல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Sep 2020, 3:18 pm
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்து வந்தது. இந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 11ஆம் வகுப்பும் இணைந்து கொண்டது. இந்த சூழலில் தொடக்க வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சியூட்டியது. அதாவது 3, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.
Samayam Tamil TN Public Exams


இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஹேப்பி நியூஸ் - தமிழகப் பள்ளி மாணவர்களே இந்த வருஷம் செம ஈஸி போங்க!

மேலும் தொடக்க வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவது தமிழகக் கல்வி முறையை சீர்குலைக்கக் கூடியவை என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

தமிழகத்தில் 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. இந்த விவகாரத்தில் அரசு உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி