ஆப்நகரம்

ரேஷன் கடைகளில் சூப்பர் ப்ளான் - குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ்!

ரேஷன் கடைகளில் மஞ்சப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Samayam Tamil 28 May 2022, 7:50 pm

ஹைலைட்ஸ்:

  • ரேஷன் கடைகளில் மஞ்சப்பை?
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ்!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Ration Shop
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மஞ்சப்பை திட்டம் ரேஷன் கடைகள் மூலம் செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், 'மீண்டும் மஞ்சப்பை' என்ற திட்டத்தை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். பிளாஸ்டிக்கை தவிர்த்து, துணிப்பைகளின் உபயோகத்தை பொது மக்களிடம் மீண்டும் கொண்டு வர விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 'மஞ்சள் பை' திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்டு உள்ளது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து மறையவில்லை. துணி பைகளின் பயன்பாடு அதிகரித்தால், பிளாஸ்டிக் பயன்பாடு தானாகவே குறைந்து விடும். இதற்கு, தமிழக அரசு அறிவித்த 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
மாநிலங்களவை எம்பி ஆகிறார் ப.சிதம்பரம் - காங்கிரஸ் கொடுக்கும் கிப்ட்!
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொது மக்களுக்கு இலவசமாக துணிப்பை வினியோகிப்பதன் மூலம் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும். மேலும், துணி உற்பத்தி சார்ந்த நெசவாளர்கள், துணி உற்பத்தியாளர்கள், தொழிலாளர் உள்ளிட்டோர் இதன் மூலம் பயன்பெறுவர். இதனை செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி