ஆப்நகரம்

புதிய தலைமைச் செயலகம் கிண்டியில் அமைகிறதா? ராஜ் பவனை காலி செய்வாரா ஆளுநர்?

புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு கிண்டியில் இரு இடங்களை கோடிட்டு காட்டியுள்ளார் துரைமுருகன்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 20 Apr 2023, 7:36 am
கலைஞர் கருணாநிதி பல்வேறு வசதிகளுடன் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். பத்தாண்டு கால அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் திமுக ஆட்சி பொறுப்பேற்றது. ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
Samayam Tamil tn new secretariat


திமுக ஆட்சிக்கு வந்ததும் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை மீண்டும் புதிய தலைமைச் செயலகமாக மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தமிழ்நாடு அரசு அந்த முடிவில் இல்லை என்று கூறுகிறார்கள். புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் அதே சமயம் அதை எங்கே கட்டுவது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை. நிதி பற்றாக்குறை இருப்பதால் உடனடியாக சட்டமன்றம் கட்ட தொடங்கினால் விமர்சனங்கள் எழுமோ என்ற கேள்வியும் ஆளுங்கட்சி மேலிடத்தில் எழுந்துள்ளது.

இந்நிலையில் புதிய சட்டமன்றம் கட்டுவது தொடர்பாக சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பின்னர் அவை முன்னவரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இது குறித்து பேசினார். “விவாதத்தில் உறுப்பினர்கள் பேசும் போது, புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதை நானும் ஒப்புக்கொள்கிறேன். முதலமைச்சரிடம் நானும் இதே கோரிக்கையை வேண்டுகிறேன். விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய சட்டமன்றத்தை கட்டுவார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு சூப்பர் சலுகை: முதல்வர் ஸ்டாலின் ‘செம’அறிவிப்பு!
கேரளா, ஆந்திராவில் சட்டமன்றங்கள் எப்படி உள்ளது என போய் பாருங்கள். சென்னையில் ராஜ்பவனை எடுத்துக் கொள்ளுங்கள், அது நம்முடைய இடம்தான். அதனுடைய வரலாறு படித்து பார்த்தேன். அந்த இடத்தையும் எடுக்கலாம்.

கிண்டி ரேஸ் கோர்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். 700 ஏக்கர் கொண்ட இடம். அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார்கள், அதையும் எடுக்கலாம்.

முதலமைச்சர் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். அவருடைய காலத்தில் புதிய சட்டமன்றம் உருவாக அதை செய்ய வேண்டும். ஆனால் இந்த கால கட்டத்திலேயே கட்ட வேண்டும் அப்போதுதான் நாமும் இருப்போம்” என்று கூறினார்.
ஸ்டாலினுக்கு போன் செய்த மம்தா.. ‘பஞ்சாயத்த கூட்டுங்க’.. அப்படி என்ன பேசிகிட்டாங்க.?
ஆளுநருக்கு என் அவ்வளவு பெரிய மாளிகை, சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லங்களில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாமே என்று சமீபகாலமாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் ராஜ் பவனில் தலைமைச் செயலகத்தை கட்டலாமா என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் துரைமுருகன்.

அதே போல் கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார். இரு இடங்களும் கிண்டியில் இருப்பதால் எந்த இடத்தில் கட்டுவதற்கு முதல்வர் ஸ்டாலின் சம்மதம் தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி