ஆப்நகரம்

பள்ளிக் கல்வித்துறையில் மாற்றம்: ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவி கொடுப்பாரா ஸ்டாலின்?

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவியை கலைத்து விட்டு அவரது அதிகாரத்தை மீண்டும் பழையபடியே பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் வழங்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 15 May 2023, 12:59 pm
பள்ளிக் கல்வித்துறை ஆணையராக பணியாற்றி வந்த நந்தகுமார் மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆணையரின் அதிகாரம் மீண்டும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வசம் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Samayam Tamil mk stalin and teachers


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தொடக்கக் கல்வி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அரசு தேர்வுகள் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம், நூலகத் துறை என 10 இயக்குநரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நிர்வகிக்க ஒவ்வொன்றுக்கு தனித்தனி இயக்குநர்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு கீழ் வருவார்கள். இந்த பள்ளிக்கல்வி இயக்குநர் பதவிக்கு ஆசிரியர் பணியிலிருந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று வருவார்கள். ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரி கொண்டுவரப்பட்டார். அவரே துறையின் தலைமை அதிகாரியாக இருந்தார்.

டப்பாடிக்கு நெருக்கடி: டெல்லியை திருப்பி விட்ட சசிகலா - இந்த தடவை அது நடக்காது!

ஐஏஎஸ் பணியிலிருந்து வருபவர்களுக்கு துறை ரீதியான அனுபவம் இருக்காது, இந்த துறையிலேயே பல்வேறு மட்டங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கே ஆசிரியர்கள், மாணவர்களின் தேவைகள் குறித்து தெரியும் என்பது பள்ளிக்கல்வித்துறையிலிருந்து அதிகமாக எழும் குரலாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வேறு மாநிலங்களை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகூட அந்த இடத்தில் அமரவைக்கப்படலாம். தமிழ் தெரியாத அதிகாரி எவ்வாறு பள்ளிக் கல்வித்துறையை வழிநடத்த முடியும்? மீண்டும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கே தலைமை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வந்தன.

அடுத்தடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வந்ததே தவிர அந்த ஆணையர் பதவி கலைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறை ஆணையராக பணியாற்றிய நந்தகுமார் ஐஏஸ் மனித வள மேம்பாட்டு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவில் இன்னொரு அமைச்சருக்கு சிக்கல்: பாஜக கையில் அடுத்த ஆடியோ?

இதனால் ஆணையரின் அதிகாரம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு பள்ளிக் கல்வித்துறையினரிடையே ஏற்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி