ஆப்நகரம்

பெண்ணின் சிறுநீரகத்தில் 1 கிலோ கல்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த ஒரு கிலோ அளவிலான கல்லை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

TNN 26 May 2017, 5:34 pm
பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த ஒரு கிலோ அளவிலான கல்லை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
Samayam Tamil woman has bladder stones weighing 1kg removed
பெண்ணின் சிறுநீரகத்தில் 1 கிலோ கல்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்


ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி சந்திரா. இவருக்கு கடந்த ஆறு மாதமாக சிறுநீரக பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு, அவரது சிறுநீரகப் பகுதியில் கல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு 5 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழு அறுவை சிகிச்சை செய்தது.

அறுவை சிகிச்சையின் போது அவரது சிறுநீரகப் பகுதியில் 1 கிலோ 300 கிராம் எடையிலான கல் இருந்தது. இதனையடுத்து அதை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர்.

அடுத்த செய்தி