ஆப்நகரம்

கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட பெண் பலி

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதால் அவா் உயிாிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

TOI Contributor 13 Aug 2017, 2:08 am
அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதால் அவா் உயிாிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Samayam Tamil women died in wrong treatment
கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட பெண் பலி


பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலைக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெரம்பலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மணிமேகலை இரண்டாவது குழந்தை பெற்றபோது, அவருக்கு 'காப்பர் டி' என்ற கருத்தடை சாதனத்தை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனா்.

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி மணிமேகலைக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி அதிகமானதால் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மணிமேகலையை பரிசோதித்த மருத்துவர்கள் ’காப்பர் டி’ யால் இன்பெக்சன் ஏற்பட்டுள்ளது. காப்பர் டி-யை எடுத்துவிட்டால் சரியாகிவிடும் என்று கூறியுள்ளனா். இதைத்தொடர்ந்து, 9-ம் தேதி மணிமேகலைக்கு காப்பர் டி-யை மருத்துவா் எடுக்க முயற்சி செய்துள்ளார்.

சரியாக வராததால் அறுவை சிகிச்சை மூலம் கருவியை எடுக்க முயற்சித்தபோது கர்ப்பப் பையில் ஓட்டை விழுந்தது. இதனையடுத்து சுயநினைவை இழந்த மணிமேகலைக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு மணிமேகலை உயிரிழந்தார். சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் நர்ஸ் ஆகியோரை கைது செய்யவேண்டும் என்று கூறி ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

தகவலறிந்த பெரம்பலூர் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து மணிமேகலையின் கணவர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் காவல்துறையினர் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் சூரியபிரபா மற்றும் நர்ஸ் ரமணிஜீவாகேத்ரின் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பெண்ணின் இறப்புக்கு காரணமான முதுநிலை உதவி மருத்துவர் சூர்யபிரபா, மகப்பேறு உதவியாளர் ரமணி ஜீவாகேத்ரின் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் இணை இயக்குநர் செல்வராஜன்.

Women died in wrong treatment

அடுத்த செய்தி