ஆப்நகரம்

பிளாஸ்டிக் ஒழிக; விவசாயம் வாழ்க - பைக்கில் நின்றபடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண்!

பிளாஸ்டிக்கை ஒழித்து விவசாயத்தை காக்க வலியுறுத்தி மோட்டர் பைக்கில் நின்றபடி பொது மக்களிடம் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ள தையல் தொழிலாளிக்கு, கிருஷ்ணகிரியில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Samayam Tamil 2 Mar 2019, 10:36 pm
கோவை மாவட்டம் அவனாசியை சேர்த்தவர் சைபி மேத்யூ(46). தையல் தொழிலாயான இவர், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தமிழகத்தை காக்கும் வகையில், விழிப்புணர்வு பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
Samayam Tamil women gives awareness about plastic with standing in the motor cycle
பிளாஸ்டிக் ஒழிக; விவசாயம் வாழ்க - பைக்கில் நின்றபடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண்!


கடந்த மாதம் ஊட்டியில் இருந்து மோட்டர் பைக்கில் நின்றபடி, சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு மேற்கோண்டுள்ளார்.

இவர் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து, விவசாயத்தினை காப்பாற்றுவதோடு, இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி தன்னந்தனியாக இந்த விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பல்வேறு மாவட்டங்கள் வழியாக விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்த சைபி மேத்யூ, இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு மாவட்ட கண்தானத் திட்ட தலைவர் பிரபாகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மண்ணின் உயிர் தன்மையை காக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தால் விவசாயத்தினை காக்க முடியும், ஆகையால் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, மரம் நடும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சைபி மேத்யூ, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக்கில் நின்றபடி பிளஸ்டிக்கை ஒழித்து, இயற்கையோடு விவசாயத்தினை காப்போம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அடுத்து வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக வருகின்ற 7ஆம் தேதி சென்னையில் தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தினை முடிக்க உள்ளார்.

அடுத்த செய்தி