ஆப்நகரம்

ஓபிஎஸ் உயிருக்கு அச்சுறுத்தல்: ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

TNN 2 Apr 2017, 9:53 pm
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil y category security for ops home ministry orders
ஓபிஎஸ் உயிருக்கு அச்சுறுத்தல்: ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவு


ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா என இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து அரசியல் செய்துவருகின்றனர். தற்போது நடைபெற உள்ள ஆர்கே நகர் இடைத்தேர்தலில், இரு தரப்பிலும் தனித்தனி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களுக்கு இடையிலான மோதல் காரணமாக, இரட்டை இலை சின்னம், அதிமுக பெயரைப் பயன்படுத்த, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை மின் விளக்கு சின்னத்தில் போட்டியிடும், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் உள்ளிட்டோருக்கு, மிரட்டல் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தேனி அருகே பன்னீர் செல்வம் சென்ற கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பாதுகாப்பு வழங்குமாறு பன்னீர் செல்வம் அணியினர் வேண்டுகோள் விடுத்தனர். இதன்பேரில் அவருக்கு, ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையில் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Home Ministry orders Y category security for O.Panneerselvam.

அடுத்த செய்தி