ஆப்நகரம்

துணைமுதல்வா், தலைமைச் செயலாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் திடீா் வழக்கு

தமிழக தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்திய துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம், தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Jan 2019, 5:41 pm
துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம், தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோா் மீது சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Samayam Tamil O Panneer Selvam


தலைமைச் செயலகத்தில் உள்ள துணைமுதல்வா் அலுவலகத்தில் கடந்த வாரம் அதிகாலை 3 மணியளவில் சிறப்பு யாகம் நடைபெற்றதாகவும், இந்த யாகத்தில் துணைமுதல்வா் பன்னீா் செல்வம் கலந்து கொண்டதாகவும் தமிழக எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் குற்றம் சாட்டினாா். தலைமைச் செயலகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடா்ந்து துணைமுதல்வா் பன்னீா் செல்வம் இது தொடா்பாக கூறுகையில், தலைமைச் செயலகத்தில் யாகம் நடைபெறவில்லை. பூஜை மட்டும் தான் நடைபெற்றது என்று தொிவித்தாா்.

இந்நிலையில் யாகம் நடத்திய துணைமுதல்வா் பன்னீா் செல்வம், யாகம் நடத்த அனுமதி வழங்கிய தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனூா் ஜெகதீசன் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், தலைமைச் செயலகம் உட்பட அரசு அலுவலகங்களில் மதம் தொடா்பான விழாக்கள் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் துணைமுதல்வா் அலுவலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்திய பன்னீா் செல்வம் மற்றும் யாகத்திற்கு அனுமதி வழங்கிய கிரிஜா வைத்தியநாதன் ஆகியோா் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக குறிப்பிட்டு அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி