ஆப்நகரம்

கோவை அருகே மூளைக் காய்ச்சல் பாதிப்பால் இளம்பெண் உயிரிழப்பு!

கோவை அருகே மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Jun 2019, 9:16 am
கோவை அருகே மூளைக் காய்ச்சல் பாதிப்பின் காரணமாக இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோவை அருகே மூளைக் காய்ச்சல் பாதிப்பால் இளம்பெண் உயிரிழப்பு!
கோவை அருகே மூளைக் காய்ச்சல் பாதிப்பால் இளம்பெண் உயிரிழப்பு!


கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகள் ரம்யா (21), திருச்சி சாலையில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரம்யா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் காய்ச்சல் குறையாததால் ஜூன் 15-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், ரம்யாவுக்கு மூளைக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தொடர் கண்காணிப்பில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரம்யா நேற்று உயிரிழந்தார். மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களில் மட்டும் 140 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்திலும் மூளைக் காய்ச்சலால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்; அதிகக் காய்ச்சல், வலிப்பு மற்றும் தலைவலி போன்றவை மூளைக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள். இத்தகைய அறிகுறிகள் இருப்பின், அதனை சாதரணமாக கருதி விடாமல் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையை அணுகி உரியை சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

அடுத்த செய்தி