ஆப்நகரம்

தவிடு பொடியாகும் பாஜக மத அரசியல்: அம்பலப்பட்ட அண்ணாமலை!

பள்ளி மாணவி லாவண்யாவின் மரண விவகாரத்தில் லாவண்யாவின் புதிய வாக்குமூலமும், மைக்கேல்பட்டி மக்களின் கடிதமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Samayam Tamil 28 Jan 2022, 3:23 pm
கடந்த 9-ம் தேதி மைக்கேல்பட்டி தூய இருதயப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த பள்ளி மாணவி லாவண்யாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil அண்ணாமலை


இதனை அரசியலாக கையில் எடுத்த பாஜக பள்ளி மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் விளைவாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டார் எனும் போலி பிரசாரத்தை தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போராட்டமாக மேற்கொண்டது.

இந்நிலையில், பள்ளி மாணவி லாவண்யாவின் மற்றொரு வீடியோ நேற்று வெளியாகி உள்ளது அதில், நான் 12 வது படிக்கறேன், எப்பவும் பள்ளியில் நான் தான் முதல் மாணவியாக தேர்ச்சி அடைவேன். ஆனால் என் குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டு சரியாக பள்ளி செல்ல முடியவில்லை. பள்ளிக்கு நேரமாகி சென்றால் சிஸ்டர் எதாவது கணக்கு வழக்கு பாக்க சொல்லிட்டே இருப்பாங்க அதனால சரியாக படிக்க முடியல ரேங்க் கம்மிய எடுத்தேன் இப்படியே போயிட்டு இருந்தா படிக்க முடியாதுன்னு தான் விஷத்தை குடிச்சிட்டன் என தெரிவித்தார். மேலும் அதில் மதமாற்றம் என்னும் சொல்லே எங்கும் வரவில்லை.
பாஜகவை தேடி வந்த சிக்கல்.. பாய்ந்தது பரபரப்பு வழக்கு!
இந்நநிலையில் தமிழக பாஜகவின் மத அரசியலை அம்பலபடுத்தும் வகையில் அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி மக்கள் ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில்,

எங்கள் ஊரில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என 800 க்கும் மேற்பட்டவர்கள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன், ஒரு குடும்பம் போல வாழ்த்து வருகிறோம். இத்தனை ஆண்டுகாலமாக மத சம்மதமாக எந்த பிரச்னையும் நடந்தது இல்லை. எங்கள் ஊரில் தூய இருதயப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 163 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இங்கு படிப்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் இந்துக்கள் தான். அதே போல விடுதியிலும் அதிகம் பேர் இந்துக்கள் தான்.

இந்த ஊரிலும், தூய இருதயப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இதுவரை மதமாற்ற முயற்சி நடந்தது இல்லை. இந்நிலையில் சில மதவாத சக்திகள் லாவண்யாவின் மரணத்தை வைத்து மதரீதியான கட்சிகளும், அமைப்புகளும் எங்கள் ஊரின் ஒற்றுமையை குலைக்க பார்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம். மேலும் இதை விசாரிக்க பலதரப்பட்ட குழுக்கள் அமைப்பதையும், தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதிமுகவிற்கு சரியான அடி; விரைவில் நடக்கப் போகும் பெரிய மாற்றம்?
லாவண்யாவின் மரணத்தை வைத்து பாஜக அரசியல் செய்து கொண்டிருக்கும் வேலையில், லாவண்யாவின் புதிய வாக்குமூலமும், மைக்கேல்பட்டி மக்களின் இந்த கடிதமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது போது அமைதியை குலைக்கும் வகையிலோ பொய்யான செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜீவால் காலை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி