ஆப்நகரம்

டாஸ்மாக் பாரின் மது அருந்திய முதியவர் பலி.? தஞ்சையில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ள சம்பவம்..

தஞ்சாவூரில் மதுபான கடை பாரில் கள்ளச் சந்தையில் மது அருந்திய முதியவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து ஆய்வு நடத்த சென்ற வட்டாட்சியரை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 21 May 2023, 8:30 pm

ஹைலைட்ஸ்:

  • தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய முதியவர் பலி
  • கள்ளச் சந்தையில் முதியவர் மது குடித்து உயிரிழந்ததாக கூறி குற்றச்சாட்டு
  • பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியரை சிறை பிடித்து போராட்டம்
  • இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Thanjavur alcohol drunken old man dead
தஞ்சாவூர் மாவட்டம்; தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் தற்காலிகமாக மீன் சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மீன் சந்தை இருக்கும் கீழ அலங்கம் பகுதியிலேயே அரசு மதுபான டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
முறையாக இந்த அரசு மதுபான கடை திறப்பதற்கு முன்பாகவே கடையின் அருகே இருந்த மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் மீன் சந்தையில் மீன் தொழில் செய்து வருபவர் குப்புசாமி.

அன்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த முதியவர் டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தியதை தொடர்ந்து அவரது வாயில் இருந்து உரை தள்ளியபடி மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்த மக்கள் அவரை உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதைப்போலவே அந்த மதுபான பாரில் விவேக் என்ற 36 வயது இளைஞர் ஒருவர் மது அருந்திய நிலையில் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனக்கு கூறப்படுகிறது.



இந்த சம்பவங்களை எடுத்து தஞ்சாவூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மதுபான வட்டாட்சியர் பிரபாகரன் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மதுபான கடையில் வைத்து அவரை சிறையில் வீத்தனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு வட்டாட்சியர் வெளியே விடுவிக்கப்பட்டார்.

விசாரிக்க கூட செய்யாமல் இளைஞர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - நாமக்கலில் அதிருப்தி சம்பவம்

பாஜகவினர் தொடர்ந்து அந்த கடைக்கு முன்பு நின்று இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தங்களுக்கு உண்மை என்ன என்று தெரிய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க முதியவர் பாரில் மது அருந்தி உயிரிழந்த நிமிடங்களிலேயே அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அங்கிருந்து மது பாட்டில்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த காட்சிகளை அருகில் உள்ளவர்கள் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கள்ளச்சாராயம் பருகி விழுப்புரத்தில் சிலர் உயிரிழந்த நிலையில் தற்போது அரசு மதுபான கடையில் கள்ளச் சந்தையில் மது குடித்த முதியவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி