ஆப்நகரம்

மாவோயிஸ்ட் என பொய் வழக்கு... 12 ஆண்டுகளுக்குப் பின் 7 பேர் விடுதலை

குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரும் மக்கள் பிரச்சனையைப் பேசினார்கள். அரசு அதற்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்களை மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சுமத்தியுள்ளது.

Samayam Tamil 21 Jan 2021, 2:43 pm
கொடைக்கானலில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதாக 7 பேர் மீது மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரையும் விடுதலை செய்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Maoist Terrorist


கடந்த 2008ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாக நவீன் பிரசாத் என்பவரை மோதல் சாவு என்ற பெயரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இவருடன் கண்ணன், நீலமேகம், லீமா ஜாய்ஸ் மேரி, செண்பகவல்லி, காளிதாஸ், பகத்சிங், ரஞ்சித் ஆகியோர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சுமத்திக் கொடைக்கானல் போலீசார் உபா (UAPA) சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் 44 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 17 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட 210 சான்றுப் பொருட்களும் 33 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் குற்றச்சாட்டுகள் எதுவும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே. ஜமுனா அனைவரையும் விடுதலை செய்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரும் மக்கள் பிரச்சனையைப் பேசினார்கள். அரசு அதற்குப் பதில் சொல்ல முடியாமல் அவர்களை மாவோயிஸ்டுகள் என்று குற்றம் சுமத்தியுள்ளது. இச்செயல் காவல்துறையின் அராஜகப் போக்கை வெளிப்படுத்துகிறது.

செக் மோசடி... தலைமறைவான வங்கி ஏஜென்ட்டை தேடும் சங்கரன்கோவில் போலீஸ்!

இந்த 7 பேர் மீது மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டு மக்கள் மத்தியில் அரசு தேவையற்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் ஆட்சியில் சனநாயக ரீதியான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற அரசு இவ்வாறு பொய்வழக்குப் போட்டு அவர்களை 12 ஆண்டுகள் விசாரணைக் கைதியாய் சிறையில் அடைத்து வைத்ததை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொய்யாக வழக்குப் பதிவு செய்து அதை முறையாக நடத்துவதற்குத் திறனும், தரமும் இல்லாத நிலையில் காவல்துறை உள்ளது என்பதையே தெளிவுபடுத்துகிறது.

பொய்யாகப் போடப்பட்ட இந்த வழக்கால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கொடுப்பது யார்? 12 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கு இழப்பீடு கொடுப்பது யார்?

மோதல் சாவில் உயிரிழந்த நவீன் பிரசாத் உயிரைக் கொடுக்க முடியுமா?

தேர்தல் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்... காரணம் தெரிஞ்சா அசந்திடுவீங்க!

இந்த தேர்தல் நேரத்திலாவது சனநாயகத்தைப் பாதுகாக்க மோதல் சாவுகளையும், காவல் சித்திரவதைகளையும் தடுப்போம் என்று கூற அரசுக்குத் தைரியம் உள்ளதா?

இனிமேலாவது உபா சட்டத்தை தவறாக பயன்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு உறுதி கூறுமா?

அடுத்த செய்தி