ஆப்நகரம்

பிடிபட்டது அரிக்கொம்பன் காட்டு யானை - வழி நெடுகிலும் பொதுமக்கள் ஆரவாரம்

இடுக்கியில் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் காட்டு யானை பிடிபட்டது. அது தேக்கடியில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனத்திற்குள் நள்ளிரவில் திறந்து விடப்பட உள்ளது.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 30 Apr 2023, 7:08 pm

ஹைலைட்ஸ்:

  • இடுக்கியில் அரிக்கொம்பன் காட்டு யானை பிடிபட்டது
  • வனத்துறையினர் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
  • அந்த யானை தேக்கடியில் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட உள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Arikkomban elephant
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள சின்னக்கால் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. அதனை பிடிக்க வனத்துறையினர் எத்தனையோ முறை பிடிக்க முயற்சி செய்தும் அந்த யானை பிடிபடவில்லை.
இந்த நிலையில் தற்போது அந்த ஆக்ரோஷமான அரிக்கொம்பன் காட்டு யானை பிடிபட்டுள்ளது. சின்னக்கால் பகுதியில் சங்கரபாண்டியன் வீட்டில் அடர்ந்த சோலைக்குள் இருந்த அந்த யானையை வனத்துறையினர் துப்பாக்கி மூலம் ஆறு டோஸ் மயக்க மருந்து செலுத்தி அதனை மயக்கி பிடித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

வனத்துறை மருத்துவர் அருண் ஜகாரியா தலைமையிலான குழுவினர் அந்த காட்டு யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தினர். பிடிபட்ட அரிக்கொம்பன் காட்டு யானை நான்கு கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது.



பின்னர் அது சின்னக்கால் பகுதியில் இருந்து குமுளி வழியாக தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்திற்குள் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் தேக்கடியில் இருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சீனியர் ஓடை எனப்படும் அடர்ந்த வனப்பகுதிக்குள் அந்த காட்டு யானை விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் போல் வந்த திருடர்கள் - மருத்துவ உபகரணங்களை அபேஸ் செய்ததால் கைது

யானை வருவதால் சின்னக்கால் பகுதியில் இருந்து தேக்கடி வரை வழி முழுவதும் மின்தடை செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் குமுளியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வழி நெடுகிலும் பொதுமக்கள் கூடியிருந்து ஆரவாரம் செய்து அரிக்கொம்பன் யானையை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி