ஆப்நகரம்

இந்த காக்கி சட்டைக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் கொடு: தேனியில் இந்து முன்னணி இப்படி ஒரு குரல்!

தேனி மாவட்டத்தில் உள்ள இந்து முன்னணி அமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா காலத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.

Samayam Tamil 11 Jun 2021, 6:50 pm
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தினந்தோறும் ஆட்டோ ஓட்டினால்தான் வருமானம் என்ற நிலையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
Samayam Tamil இந்த காக்கி சட்டைக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் கொடு: தேனியில் இந்து முன்னணி இப்படி ஒரு குரல்!


இந்த சூழலில் பொது முடக்கம் அமுலில் உள்ள வரை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இழப்பீடாக மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி தேனி மாவட்டத்தினர் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் அந்த மனுவில் வாகனங்களின் இன்சூரன்ஸ், பர்மிட் கட்டணம் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் வானங்களின் பெயரில் பெற்றுள்ள கடன் தொகைக்கு ஊரடங்கு முடியும்வரை விலக்கு அளிக்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பிடித்திருந்தன.

4 மாதங்களாக மாற்றுத்திறனாளிகளை அலக்கழிக்கும் தேனி கிராம நிர்வாக அதிகாரி!
கொரோனா காலத்தில் மிகவும் சிரமப்படும் ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தமிழ்நாடு அரசு நிவாரண உதவி வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனத் தேனி மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி