ஆப்நகரம்

தேனி; சில்வர் ஜூப்ளிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கூடைப்பந்தாட்ட போட்டி!

தேனி மாவட்டத்தில் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது

Samayam Tamil 18 May 2023, 2:33 pm

ஹைலைட்ஸ்:

  • சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப்

  • கடந்த 15ஆம் தேதி தொடங்கிய கூடைப்பந்தாட்ட போட்டி

  • சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் அணி முதல் சுற்றில் வெற்றி

  • மழையின் காரணமாக தாமதமான போட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் கூடைப்பந்தாட்ட போட்டி
சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் கூடைப்பந்தாட்ட போட்டி
சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் கூடைப்பந்தாட்ட போட்டி
தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான62 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுவருகின்றது. மேலும் இந்த போட்டியானது 15ம் தேதி தொடங்கியது. மேலும் இந்த போட்டியானது நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடத்தப்பட்டு வருகின்றது.

தேனியில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி.. பின்னணி இதோ..
சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் அணி வெற்றி பெற்றது
இந்நிலையில் நேற்று மாலை மற்றும் இரவு மின்னொளியில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் அணி மற்றும் புதுடெல்லி இந்திய ரயில்வே அணியும் மோதியது.இதில் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் அணி 74 க்கு 72 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து திருவனந்தபுரம் கேரளா காவல்துறை அணியும் சென்னை டிஎன்பிஏ டேலண்ட் ரிசர்ச் வின் அணியும் இரண்டாவது போட்டியில் மோதி கொண்டனர். இதில் 74க்கு 54என்ற புள்ளிக் கணக்கில் திருவனந்தபுரம் கேரள காவல்துறை அணி வெற்றி பெற்றது.
Karur text city basketball club team, தேனி மாவட்டம், Theni district, கூடை பந்தாட்ட போட்டி, basketball tournament, சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப், silver Jubilee sports club, மழை, rain ,கரூர் டெக்ஸ் சிட்டி கூடை பந்து கழக அணி,
மழையின் காரணமாக போட்டி தாமதமானது
மேலும் மூன்றாவது போட்டியில் கரூர் டெக்ஸ் சிட்டி கூடைப்பந்து கழக அணி மற்றும் புனே கஸ்டம்ஸ் அணியும் மோதி கொண்டது. இதில் புனே கஷ்டம்ஸ் அணி93க்கு 76 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் போட்டி தாமதமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
மேலும் இந்த கூடைப்பந்து போட்டியை காண்பதற்காகதேனி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் கூடைப்பந்து ரசிகர்கள்,பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியை கண்டுகளித்தனர்.

அடுத்த செய்தி