ஆப்நகரம்

தண்ணீர் ஊற்றினால் ரத்தம் வெளியேறுகிறதா? அச்சத்தில் உறைந்த மக்கள்!

பெரியகுளம் அருகே தார்சாலையில் தண்ணீர் ஊற்றும் பொழுது சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Samayam Tamil 3 May 2020, 11:55 pm
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட எ.புதுக்கோட்டை அண்ணா நகர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தெருக்களில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி கிராமம் என்பதால் பெண்கள் வாசலில் தண்ணீர் அல்லது சாணம் தெளிப்பது வழக்கம்.
Samayam Tamil தண்ணீர் ஊற்றினால் வெளியேறும் சிவப்பு திரவம்


இந்நிலையில் ஜெயப்ரியா என்பவர் வாசலில் வழக்கம்போல் தண்ணீர் தெளித்துள்ளார். சில நொடிகளிலேயே இரத்தம் வடிவதைப் போன்ற சிவப்பு நிறத்தில் திரவம் வழிந்தோடுவதைக் கண்ட அவர் அடுத்த இடத்திலும் தண்ணீர் தெளித்துள்ளார். அங்கும் ரத்த நிறத்தில் திரவம் வெளியேறுவதை அவர் கண்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்களும் தண்ணீர் தெளிக்கும் இடத்திலெல்லாம் ரத்தம் போன்ற திரவம் வெளியேறியதால் அதிர்ச்சியடைந்து கூட்டம் கூட்டமாக ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதனால அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கூட்டம் கூடியதாக தகவலறிந்த பெரியகுளம் காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தைக் கலைத்தனர்.

பின்னர் அப்பகுதியை ஆய்வு செய்ய தடயவியல் துறைக்கு தகவல் அனுப்பினர். மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரத்தம் போன்ற சிவப்பு நிறத் திரவம் வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி