ஆப்நகரம்

குச்சனூர் சனீஸ்வரர் ஆடித் திருவிழாவிற்குத் தடை: கொரோனாவால் கடவுளையே தொட முடியவில்லை!

தேனி மாவட்டம் சின்னமனூர் குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவை ரத்து செய்து, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு ஒன்றைப் பிறபித்துள்ளது.

Samayam Tamil 14 Jul 2021, 3:36 pm
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு நவக்கிரக கடவுள்களில் ஒன்றான சனி பகவான் சுயம்பு வடிவில் மூலவராகக் காட்சி தருகிறார் என இந்து மதத்தினர் வழிப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil குச்சனூர் சனீஸ்வரர் ஆடித் திருவிழாவிற்குத் தடை: கொரோனாவால் கடவுளையே தொட முடியவில்லை!


குறிப்பாகத் தமிழ்நாட்டில் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற கோயிலாக குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் ஐந்து சனிக்கிழமைகளில் நடைபெறும்.

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சாமியைத் தரிசனம் செய்வர்.
பிடிஆர் உத்தரவால் தேனி விவசாயிகளுக்கு அதிகாரிகள் தொடர் மிரட்டல்: முதல்வரிடம் சென்ற மேட்டர்!
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடக்க இருந்தது. இந்த சூழலில், கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஆடித் திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இருப்பினும் தினசரி மூன்று வேளை பூசை வழக்கம் போல் நடைபெறும் என்றும், இதில் பக்தர்கள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்ட விவகாரம் காரணமாகப் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி