ஆப்நகரம்

ரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஓபிஎஸ் விளக்கம்!

ரஜினியின் அரசியல் பிரவேசம் சூடு பிடித்திருக்கும் சூழலில், இதன் காரணமாக என்னலாம் ஏற்படும் என்பது குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்...

Samayam Tamil 3 Dec 2020, 11:19 pm
அதிமுக என்பது ஒரு ஆலமரம் ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இதை எவராலும் அசைக்க முடியாது இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது எனத் தமிழ்நாடு துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
Samayam Tamil ரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்!
ரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்!


தேனி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூறியதாவது:
பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுப்பதற்குத் தேனி மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையால் அதிமுகவின் வாக்கு எண்ணிக்கை பாதிக்காது. அதிமுக என்பது ஒரு ஆலமரம். ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இதை எவராலும் அசைக்க முடியாது இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

ரஜினியுடன் அதிமுக கூட்டணியா? ஓபிஎஸ் சொல்வது என்ன!

ரஜினிகாந்த் என்ற குழந்தை இப்போதுதான் பிறந்துள்ளது. அந்தக் குழந்தை வளர்ந்து ஆளாகி வந்தபின் ரஜினி முதல்வர் ஆவது குறித்துப் பார்க்கலாம்.

எதிர்கால அரசியலில் எதுவும் நடக்கலாம். முதலில் ரஜினி கட்சியைத் தொடங்கட்டும். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி