ஆப்நகரம்

ஆட்சியிலிருக்கும் திமுகவே தேனி கலெக்டரிடம் மனு: ஏன் இப்படி?

தேனி மாவட்டம் போடி பகுதியில் டவ்-தே புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Samayam Tamil 19 May 2021, 12:48 am
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் டவ்-தே புயலால் காரணமாக ஏற்பட்ட சேதத்தால் மா, வாழை பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
Samayam Tamil ஆட்சியிலிருக்கும் திமுகவே தேனி கலெக்டரிடம் மனு: ஏன் இப்படி?


சுமார் ஆயிரம் ஏக்கர் பரபபலவில் நன்கு விளைந்த நிலையிலிருந்த மாங்காய்கள் மரத்திலிருந்து கீழே உதிர்ந்தது. சேதம் அடைந்த மா மற்றும் வாழை விவசாயத்திற்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தேனி வடக்கு மாவட்ட கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதில் திமுக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் விவசாய சங்கத்தினர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கத் தமிழ்ச்செல்வன்:
டவ்-தே புயலால் போடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட 4 ஆயிரம் டன் மதிப்புள்ள மாங்காய்கள் சூறாவளிக் காற்றால் உதிர்ந்தது.

துணை முதல்வராகவே வாழும் ஓபிஎஸ்: தேனியில் என்ன செய்தார்!

இதனை நம்பியுள்ள 800 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் துரிதமாகச் செயல்பட்டுப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி