ஆப்நகரம்

ஒபிஎஸ் மகன் ஃபேஸ்புக் கணக்கு: அதிமுகவினர் பண வேட்டை, அதிர வைக்கும் கதை!

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் பெயரில் போலி முகநூல் கணக்கு ஒன்றை வைத்து அதிமுகவினர் பொதுமக்களிடையே பணம் வசூல் செய்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Samayam Tamil 18 May 2021, 6:13 pm
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப். இவர் பெயரை வைத்து சிலர் போலியான முகநூல் கணக்கைத் தொடங்கி அதன் வழியாக, பொது மக்களிடையே பணம் வசூல் செய்துள்ளனர்.
Samayam Tamil ஒபிஎஸ் மகன் ஃபேஸ்புக் கணக்கு: அதிமுகவினர் பண வேட்டை, அதிர வைக்கும் கதை!


இதுபற்றி அறிந்த ஜெயபிரதீப் தற்போது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாகத் தேனி மாவட்ட அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் பாலச்சந்தர் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விப ஜெயபிரதீப் பெயரில் போலியான முகநூல் கணக்கைத் தொடங்கி, அதன் மூலம் கழக நண்பர்களிடமும் பொதுமக்களிடமும் பணம் கேட்டு சமூக விரோதிகள் அவரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

துணை முதல்வராகவே வாழும் ஓபிஎஸ்: தேனியில் என்ன செய்தார்!

மேற்படி முகநூல் கணக்கு விப ஜெயபிரதீப் அவர்களின் அதிகாரப்பூர்வ முகனூல் கணக்கு அல்ல. குறிப்பாக அவர் மெசஞ்சர் பயன்படுத்துவது இல்லை என்பதைப் பொதுமக்களுக்கும் கழக நண்பர்களுக்கும் இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

சமூக வலைதள நண்பர்கள் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள போலியான முகநூல் கணக்கில் (https://www.facebook.com/profile.php?id=100059825323060)
லிங்கை தொடர்புகொண்டு Fake Account என ரிப்போர்ட் அடிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அடுத்த செய்தி