ஆப்நகரம்

கதறி அழுத தொழிலாளி: எஸ்.பி. செய்த ஆகச் சிறந்த உதவி!!

மகாராஷ்டிராவில் மகன் இறந்ததையடுத்து, தேனியில் கரும்பு வெட்டும் பணியை மேற்கொண்டு வந்த கூலித் தொழிலாளி தனி காரில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Samayam Tamil 21 May 2020, 1:34 am
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வைகை அணை அருகே தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கரும்பு வெட்டும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
Samayam Tamil theni police


கொரோனா ஊரடங்கினால் தற்போது இவர்கள் ஆலை வளாகத்தில் தங்கி உள்ளனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயிலில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இவர்களை ஆய்வு செய்ய, தேனி எஸ்பி. சாய்சரண் தேஜஸ்வி தொழிலாளர்கள் தங்கியிருக்கும் ஆலை வளாகத்துக்கு சென்றார்.

கஞ்சா 'ஹெவிலாஸ்': மொத்தமாய் சிக்கிய கடத்தல் கும்பல்!!

அப்போது அங்கிருந்த கழுஜாதன் என்ற தொழிலாளி, தனது மகன் சொந்த ஊரில் இறந்துவிட்டார். இறுதிச் சடங்கு செய்ய வேண்டும். எனவே, தம்மை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பும்படி கதறி அழுதார்.

உடனே எஸ்பி. சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட நிர்வாகத்திடம் பேசி இ.பாஸ் அனுமதி பெற்றார். மேலும் ஆலை நிர்வாகம் மூலம் ஒரு கார் ஏற்பாடு செய்து, மகாராஷ்ட்ரா மாநிலம் யவாத்மால் எனும் இடத்திற்கு அந்த தொழிலாளியை அனுப்பிவைத்தார். மற்ற தொழிலாளர்கள் சில நாட்களில் ரயிலில் மகாராஷ்டிராவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

அடுத்த செய்தி