ஆப்நகரம்

எண்ணெய் இறக்குமதி என ராணுவ வீரரிடம் ரூ 60 லட்சம் மோசடி செய்த வெளிநாட்டு இளைஞர்!

தேனி மாவட்டத்தில் ராணுவ வீரரிடம் ரூபாய் 60 லட்சம் மோசடி செய்த ஐவோரினீ நாட்டைச் சேர்ந்த இளைஞரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 1 Dec 2021, 9:53 pm
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரர் அதிர்ஷ்டராஜா(37). இவர் பொன்மனம் என்ற பெயரில் ஆயில் மில் நடத்திவருகிறார். மேலும் பிரபல பாமாயில் கம்பெனியின் விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார்.
Samayam Tamil ராணுவ வீரரிடம் ரூ 60 லட்சம் மோசடி செய்த வெளிநாடு இளைஞர்: எப்படி பிடித்தது போலீஸ்?


அவர் பாமாயிலை தனது சொந்த பிராண்டில் வெளியிடும் நோக்கில் சுய விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தொடர்பு கொண்ட நபரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அதிர்ஷ்ட ராஜா 5 மெட்ரிக் டன் அளவிற்கு ட்ரையல் ஆடர் மற்றும் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இமெயில் வழியாக தொடர்புகொண்ட குறிப்பிட்ட நபர்கள்
கப்பல் மூலமாகவே எண்ணெய் அனுப்பப்படும் குறைந்தது 50 மெட்ரிக் டன் அளவு ஆர்டர் செய்ய வேண்டும் என மெயில் அனுப்பி உள்ளனர். இதையடுத்து அதிர்ஷ்ட ராஜா 75 மெட்ரிக் டன் எண்ணெய் ஆர்டர் செய்து 7 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

செல்லும் இடமெல்லாம் கேமரா: தேனி கலெக்டர் விளம்பர பிரியரா?
அடுத்தபடியாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும். நிறுவன மேலாளர் மாறியதால் கூடுதல் பணம் வேண்டும் என பலமுறை படிப்படியாக மொத்தம் 60 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதங்களில் அனுப்பி உள்ளார் அதிர்ஷ்ட ராஜா.

ஒரு கட்டத்தில் எந்த ஒரு இமெயிலும் வரவில்லை,எண்ணெய்யும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அதிர்ஷ்ட ராஜா தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதிர்ஷ்ட ராஜாவின் இமெயிலுக்கு வந்த தகவலைக் கொண்டு விசாரணையை துவங்கப்பட்டது.
சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்று ஐவோரினீ நாட்டைச் சேர்ந்த கோமே ஆர்தர் சில்வஸ்டர் என்ற இளைஞரை கைது செய்தனர்.

அவரை தேனி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வருகின்றனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்து தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சென்னை சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி