ஆப்நகரம்

கஞ்சா 'ஹெவிலாஸ்': மொத்தமாய் சிக்கிய கடத்தல் கும்பல்!!

தேனி அருகே கஞ்சா கடத்தல் கும்பல் போலீிசில் மொத்தமாய் சிக்கியது.

Samayam Tamil 21 May 2020, 12:58 am
தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, சார்பு ஆய்வாளர்கள் திவான்மைதீன் ரோமியோதாமஸ் மற்றும் சில காவலர்கள் மணிக்கட்டி ஆலமரம் என்ற பகுதியில் புதன்கிழமை காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
Samayam Tamil ganja


அப்போது, அவ்வழியாக வந்த TN-63 E1414 என்ற பிக் அப் வாகனத்தை நிறுத்தியபோது அதன் ஓட்டுனரும், மற்றொருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் ஒன்பது சாக்குப் பைகளில் 180 கிலோ கஞ்சாவை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த வாகனத்தில் வந்த சுகப்பிரியா, முத்துச்செல்வம், சுவாதி, ஈஸ்வரி, சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இங்கேயும் இதுதான் நிலைமை: கேரளாவிலிருந்து நடந்து வந்த தமிழர்கள்!

அப்போது அவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கஞ்சாவை மலையடிவாரத்தில் பதுக்கி வைத்திருந்ததாக கூறினர்.

தற்பொழுது தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் வாகனத்தை ஏற்பாடு செய்து பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய நபர்கள் செல்லக்காளி மற்றும் ஜெயக்குமார் என்பதும் தெரிய வந்தது.

தேனி டூ உ.பி.: பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்ட தொழிலாளர்கள்!

இதையடுத்து, 180 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கஞ்சாவை கடத்தி வந்த 3 பெண்கள் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய செல்லக்காளி, ஜெயக்குமார் ஆகியோரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி