ஆப்நகரம்

பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் பெற்றோருக்கு ஜாக்பாட்!

மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, பிள்ளைகளை தங்கள் பள்ளியில் சேர்க்கும் பெற்றோருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊக்கத்தொகை அளித்து அசத்தி வருகின்றனர்.

Samayam Tamil 3 Jul 2021, 10:24 am

ஹைலைட்ஸ்:

  • அரசுப் பள்ளி பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோருக்கும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை
  • தேனி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்.
  • ஆசிரியர்களின் அசத்தல் ஐடியாவால் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை
தேனி அருகே அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து காமயகவுண்டன்பட்டி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் பள்ளி தலைமையாசிரியர்(பொறுப்பு) வீரமணி தலைமையில் ஆசிரியர்கள் மாதவன், ராஜா, ஷபி அகமது, ஆசிரியை ராதிகா ஆகியோர் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்தனர்.

சிறுத்தை பீதி காரணமாக ஓபிஎஸ் காத்திருப்பு: என்னதான் நடக்கிறது தேனியில்?

அதன்படி அவர்கள் தங்களது சம்பள பணத்தில் இருந்து 6 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் மாணவர்களின் பெற்றோருக்கு ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கி வருகிறார்கள்.

இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, "கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு நாங்கள் வழங்கும் ஊக்கத்தொகை உதவியாக இருக்கும் என்று கருதி வழங்கி வருகிறோம்" என்றனர்.

இதனால் தனியார் பள்ளிகளை நோக்கி சென்ற பெற்றோர் தற்போது தங்கள் பள்ளியை நோக்கி படை எடுத்து வருவதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர் காமயகவுண்டன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள்.

அடுத்த செய்தி