ஆப்நகரம்

அரிக்கொம்பன் யானை அச்சத்தில் தேனி மலை கிராம மக்கள் - வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு

தேனியில் மலை கிராம மக்களை அச்சுறுத்தி வரும் அரிக்கொம்பன் காட்டு யானையை வனத்துறையினர் கண்காணிப்பதில் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 16 May 2023, 10:44 am

ஹைலைட்ஸ்:

  • மகேமலை எஸ்டேட் பகுதியில் அரிக்கொம்பன் யானை முகாம்
  • அதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம்
  • வனத்துறையினர் யானையை கண்காணிப்பதில் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil arikkomban elephant
கேரளா மாநிலம் மூணாறு டெய்லி தோட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் என்ற அரிக்கொம்பன் யானையை கேரளா வனத்துறையினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிடித்தனர்.
அதன் பின்னர் அது வண்டிப்பெரியார் அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அங்கிருந்த அரிக்கொம்பன் யானை தற்போது தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை ஆனந்தா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அது இரவு நேரங்களில் மலை கிராமங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அச்சுறுத்துவதாகவும் மாலை நேரங்களில் சாலையில் இறங்கி வாகனங்களை அச்சுறுத்துவதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன் பகுதியில் உள்ள கருப்பு தேவர் காடு என்னும் இடத்தில் குடியிருப்பு வீட்டை சேதப்படுத்தி உள்ளது

மேலும் வனத்துறையினர் யானையை அப்புறப்படுத்த எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



மேலும் உயிர் சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்னதாக யானையைப் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை வனத்துறை மெத்தனம் காட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நூதனமாக தங்கம் கடத்தல் - திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி

உடனடியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அந்த காட்டு யானையை வனத்துறையினர் மீண்டும் பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி