ஆப்நகரம்

தேனி மாவட்டத்தில் முக ஸ்டாலின் மருத்துவ திட்டத்தால் பயனடையப் போகிறவர்கள் எத்தனை பேர்?

“மக்களைத் தேடி மருத்துவம்” தேனி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 750 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் முரளீதரன் தகவல் அளித்துள்ளார்.

Samayam Tamil 5 Aug 2021, 8:46 pm
தமிழ்நாடு அரசு மக்களைத் தேடி வரும் மருத்துவம் என்ற புதிய திட்டத்தை இன்று தொடக்கி வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாகத் தேனி மாவட்டம் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
Samayam Tamil தேனி மாவட்டத்தில் முக ஸ்டாலின் மருத்துவ திட்டத்தால் பயனடையப் போகிறவர்கள் எத்தனை பேர்?


தொடர்ந்து நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேனி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் மூலம் தொற்று நோய் பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்தால், தொற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வயது முதிர்ந்த நபர்களுக்குச் சேவை செய்தல், கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடுதல் தாய்மார்களுக்குப் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு போன்ற பல சேவைகள் செய்யப்படவுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 750 நோயாளிகளுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று சிகிச்சை அளிக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.
மாமியாரை அதிகாரம் செய்ய பெண்களுக்கு கலெக்டர் கலக்கல் அட்வைஸ்!
இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் ரமேஷ் குமார் மற்றும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி