ஆப்நகரம்

வெளியூர் பறந்த கணவன்; வீட்டில் மனைவி இருந்த கோலம்!

இரவொடு இரவாக கணவன் வெளியூர் பறந்த நிலையில் வீட்டிற்குள் மனைவி இருந்த கோலம் கிராம மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Samayam Tamil 24 May 2022, 4:07 pm
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவரது மகன் மகேந்திரன் (38). இவர், ஊரில் வாடகை பாத்திரம் கடை வைத்துள்ளார்.
Samayam Tamil போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை


இவருக்கும், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் தனலட்சுமி (35) என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே கடும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மகேந்திரன் நேற்றிரவு தொழில் சம்பந்தப்பட்ட வெளியில் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் வீட்டின் கதவு திறந்து திறக்கப்படாததால் அருகில் இருந்த மகேந்திரனின் அம்மா கதவை திறந்து பார்த்தபோது தனலட்சுமி இரத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.

தங்கையை சீரழித்த அண்ணன்; கலெக்டர் கதவை தட்டிய அப்பா!

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தனலட்சுமியை மீட்டு, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தனலட்சுமி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து தனலட்சுமியின் தந்தை கோவிந்தராஜ் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கை விட்ட மகன்.. கதறும் பெற்றோர்; கை கொடுப்பாரா கலெக்டர்?

மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிய கணவன் வெளியூர் சென்ற நிலையில் மனைவி வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ள சம்பவம் கழுவங்காடு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கணவன், மனைவி பாசத்துடன் இருப்பார்கள். குழந்தை இல்லாதது தான் ஒரே பிரச்சனை. என்ன பிரச்சனை என்றும் புரியவில்லை. வீட்டுக்குள் காயங்களுடன் தனலட்சுமி இறந்து கிடந்து உள்ளது, ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது’ காவல் துறை தான்..இனி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அடுத்த செய்தி