ஆப்நகரம்

கல்லூரி மாணவர்களுக்கு வந்தது சிக்கல்; பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வந்த திடீர் சிக்கல் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 2 Dec 2021, 10:07 pm

ஹைலைட்ஸ்:

  • கல்லூரி மாணவர்களுக்கு திடீர் சிக்கல்
  • பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கண்டனம்
  • உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவல்வெண்ணி கிராமத்தில் தனியார் கல்லூரி மற்றும் அரசு தொழிற்கல்வி நிறுவனம் உள்ளது. இவற்றில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் வெளியூரில் இருந்து வருவதால் பேருந்துகளில் பயணம் செய்து வந்து படிக்க வருகின்றனர்.

இவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மாலை நேரங்களில் கோவில்வெண்ணி பகுதிகளில் நிற்காமல் செல்வதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் அப்பகுதியில் நிற்கும் தனியார் பேருந்தில் கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் கும்பலாக ஏறுவதால் இடம் இல்லாமல் படிக்கட்டு, ஏணிகளில் ஏறி மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். மாணவிகள் வேறு வழியின்றி மணிக்கணக்கில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

தலையில் கை வைக்கும் ஜெயக்குமார்; கோதாவில் இறங்கிய ஓபிஎஸ், இபிஎஸ்!

எனவே உயிரிழப்புகள் ஏற்படாதவாறு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பேருந்து வசதிகளையும் அனைத்து பேருந்துகள் கோவல்வெண்ணி பகுதிகளில் நின்று மாணவர்களை பேருந்தில் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர்களுக்கு திடீர் உத்தரவு; சமாதானம் என்கிற பேச்சுக்கே இடமில்லை!

அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதால் கல்லூரி நிர்வாகங்களும் இதுதொடர்பாக போக்குவரத்து துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி