ஆப்நகரம்

Mekedatu dam: மேகதாது அணை விவகாரம்.. கலெக்டர் முன்னாள் மோதிக் கொண்ட விவசாயிகள்!

மேகதாது அணை விவகாரத்தில் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டர் முன் மோதிக்கொண்ட விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 Jun 2022, 5:49 pm

ஹைலைட்ஸ்:

  • மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை
  • காவிரி மேலாண்மை வாரியத்திற்கு விவசாயிகள் கண்டனம்
  • அதிகாரிகளை குறைகூறிய விவசாயிகளுக்கும் அதனை கண்டித்த விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திருவாரூர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை பரிசீலிப்போம் என தெரிவித்துள்ள காவிரி மேலாண்மை வாரியத்திற்க்கு விவசாயிகள் திருவாரூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கருப்புத்துணியுடன் கண்டனம் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்திர விவசாய குறைதீர் கூட்டம் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் ஆட்சியரின் முன்வந்து கையில் கருப்புத்துணியுடன் காவிரியின் குறுக்கே அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், காவிரி மேலாண் வாரியம் சட்ட விரோதமாக இந்த அறிக்கையை பரிசீலிப்போம் என்று கூறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும், உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Airtel 5g: ஏர்டெல் 5 ஜி டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு.. திருவாரூரில் பரபரப்பு!

தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற போது அதிகாரிகளை குறைகூறிய விவசாயிகளுக்கும் அதனை கண்டித்த விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆட்சியர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதனம் செய்தார். இதனால் சிறிது நேரம் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி