ஆப்நகரம்

அரசு பள்ளியில் விழுந்த இடி; வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி.. அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் இடி விழுந்ததில் பள்ளி கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 28 Sep 2022, 1:16 pm
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா சீதக்கமங்கலம் ஊராட்சியில் மேல ராமன் சேத்திபகுதியில் அரசு‌ தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று விடியற்காலையில் கனமழை காரணமாக அப்பள்ளியில் உள்ள தென்னை மரத்தில் இடி விழுந்து பள்ளி கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
Samayam Tamil வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி


இந்த பள்ளி கட்டப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த பள்ளியில் பயிலக்கூடிய 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள ஒரு வீட்டில் தற்போது பாடம் படித்து வருகிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு 17 ஆம் ஆண்டில் இந்த பள்ளிக்கூடம் புனரமைக்கப்பட்டுள்ளது. இருந்த பொழுதும் சரிவர புனநரமைக்காமல் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.


மேலும் ஒரே வகுப்பறையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்கள் நடத்துகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட பள்ளி என்பதால் அடிக்கடி பள்ளி மேற்கூறையில் காரைகள் பெயர்ந்து மாணவர்கள் மீது விழுகிறது. இதனால் இந்த பள்ளியில் அச்சத்துடன் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

தமிழக முழுவதும் போலீசார் விடுமுறையின்றி பணியாற்ற உத்தரவு; திருப்புவனம் எஸ்ஐ பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு!

இந்த நிலையில் தற்போது இடி விழுந்து பள்ளி மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுக்கப்பட்டும், ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆகவே அரசு உடனடியாக மாணவர்களின் நலன் கருதி பள்ளியை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி