ஆப்நகரம்

அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மர்... 100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு.. மன்னார்குடி விவசாயிகள் கவலை!

மன்னார்குடி அருகே அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மரால் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது‌.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 16 Jun 2022, 2:39 pm
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கருவாக்குறிச்சி கிராமத்தில் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் கோடைபருவத்தில் ஆழ்குழாய் பாசனத்தின் மூலம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
Samayam Tamil அடிக்கடி பழுதாகும் டிரான்ஸ்பார்மர்


அதன்படி நடப்பு கோடைப்பருவத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மற்றும் பச்சை பயிர் சாகுபடி செய்யப்பட்டு தயாராகி வருகிறது. இத்தகைய சூழலில் கருவாக்குறிச்சி கிராமத்தில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பழுதானதால் சாகுபடி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சமுடியாமல் பச்சை பயிர் நாற்றாங்கள் கருக தொடங்கின.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்ததின் பேரில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்த மின்மாற்றிக்கு மாற்றாக புதிதாக மின்மாற்றியனை அமைத்து தந்து மின்சார விநியோகத்தை சீராக்கினர்‌. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்திருந்த நிலையில் புதிதாக அமைத்துதந்த மின்மாற்றி உயர் மின் அழுத்தம்காரணமாக வெடித்து சிதறியது. இதனால் மீண்டும் அப்பகுதியில் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

சிறுமியை தொந்தரவு செய்த போதை ஆசாமி.. வெளுத்து வாங்கிய தந்தை‌‌.. வைரலாகும் வீடியோ!

கருவாக்குறிச்சி கிராமத்தில் உயர்மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்மாற்றிகள் பழுதடைந்து வருவதால் மின்சாரம் இன்றி பச்சை பயிர் உள்ளிட்ட நாற்றாங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகிவருவதால் கடன்வாங்கி சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர். மேலும் கருவாக்குறிச்சி பகுதியில் மின்மாற்றி பழுதால் மின்சாரம் இன்றி குடிநீர் விநியோகமும் தடைப்பட்டு வருவதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி